விநாயகர் சதுர்த்திக்கு ”சந்திரமுகி 2” ரிலீஸ்!!

 
சந்திரமுகி2

2005ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன் தாரா, ஜோதிகா நடிப்பில் வெளியான “சந்திரமுகி “ படம் வெளியாகி சக்கை போடு போட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி  17 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தற்போது சந்திரமுகி 2 படம் தயாராகி வருகிறது.

சந்திரமுகி2

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முண்ணனி நட்சத்திரங்கள்  நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில்  சந்திரமுகி 2ம்   பாகம் விநாயகர் சதுர்த்தி அதாவது செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என   தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

சந்திரமுகி2

அந்த வகையில் முதல் பாகம் போல் இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  சந்திரமுகி 2விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய 5 மொழிகளிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web