விஜய் அரசியல் பயணத்தை தடுக்க முயற்சி ... எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேச்சு!
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் விஜய்யின் அரசியல் பயணத்தையும் ‘ஜனநாயகன்’ படத்தின் தாமதத்தையும் இணைத்து கருத்து தெரிவித்தார். ஜனநாயகன் படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்களும் பெண்களும் அரசியலை தெளிவாக பேசத் தொடங்கியுள்ளதாகவும், அவர்கள் தன்னைவிட அதிக புரிதலுடன் இருப்பதாகவும் கூறினார்.
சென்சார் பிரச்சனை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை போன்றவை விஜய்க்கு பாஜக தரப்பில் இருந்து வரும் நெருக்கடிகள் என சந்திரசேகர் குற்றம்சாட்டினார். இத்தகைய சவால்கள் வந்தாலும் விஜய் எதற்கும் பயப்படாதவர் என்றும், அவரது அரசியல் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் புதிய அரசியல் சக்தி உருவாவது எளிதல்ல என்றும் அவர் கூறினார். தவெக–காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஜனநாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததை நினைவுகூர்ந்தார். விஜய் தரும் புதிய சக்தி மூலம் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்றும், இந்த வாய்ப்பை அந்த கட்சி பயன்படுத்த வேண்டும் என்றும் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
