பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவுகளில் மாற்றம்!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

 
அண்ணா பல்கலை கழகம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.  ரிசல்ட் வருவதற்கு முன்பே பலரும் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில்  பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கல்லூரி மாணவிகள்


அதன்படி 2023-24  கல்வி ஆண்டை பொறுத்தவரை  அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில்  4 பாடப்பிரிவுகளில் இடங்களுக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 6 பாடப்பிரிவுகளில் இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  சிவில் பாடப்பிரிவில் 1,110 இடங்களும், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 1,836 இடங்களும், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 360 இடங்களும், இ.சி.இ. பாடப்பிரிவில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.  

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

அதே நேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 1,800 இடங்கள், ஐ.டி. பிரிவில் 2,280 இடங்கள், ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் 2,520 இடங்கள், சைபர் செக்யூரிட்டி பிரிவில் 1,200 இடங்கள், ஏ.ஐ. மிஷின் லேர்னிங் பிரிவில் 690 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், 4 பாடப்பிரிவுகளில் 3,696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web