ஜூலை 11ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்!! தெற்கு ரயில்வே அதிரடி மாற்றம்!!

 
ரயில்

இந்தியா முழுவதும் ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் அந்த வழித்தடத்தில் செல்லும்  6 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.  

ரயில்

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   “ தூத்துக்குடி – மீளவிட்டா தடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையில்  சிக்னல் மாற்ற உட்பட பொறியியல் துறை சார்ந்த  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன்படி 6 ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்படுகின்றன.
 தூத்துக்குடி – வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் , வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி சிறப்பு ரயில்   2 ரயில்களும் ஜூலை 10ம் தேதி வரை முழுமையாக ரத்து 


 வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி சிறப்பு ரயில்  
தூத்துக்குடி – வாஞ்சிமணியாச்சி சிறப்பு ரயில் 
திருநெல்வேலி – தூத்துக்குடி சிறப்பு ரயில்  
தூத்துக்குடி – திருநெல்வேலி சிறப்பு ரயில் 
4 ரயில்களும்  ஜூலை 11-ம் தேதி வரை முழுமையாக ரத்து 

தடம் புரண்ட மின்சார ரயில்
பகுதி அளவில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்  
மும்பை – தூத்துக்குடி – மும்பை சிறப்பு ரயில்கள்
ஜூலை 8, 9   தேதிகளில் 
கோவில்பட்டி – தூத்துக்குடி – கோவில்பட்டி இடையே பகுதியாக 
 ரத்து  
மைசூரு – தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில்கள்  
வாஞ்சிமணியாச்சி – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web