பாமக அலுவலக முகவரி மாற்றம்…அன்புமணி ராமதாஸ் அதிரடி!

 
அன்புமணி ராமதாஸ்

 தமிழகத்தில் அடுத்த ஆண்டு  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை போல பரவி வருகிறது. ஏனெனில்  நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.  
இதற்கு  சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஒரு பக்கம் இவர் பேச மற்றோரு பக்கம் ராமதாஸ் கட்சியில் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலாளர்களை நீக்கி புதிய நபர்களை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.

தமிழ் மொழியின் முதுமையை உலகமே அறியும்...  சர்ச்சை தேவையற்றது - அன்புமணி அறிக்கை!
இது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் வெடித்துள்ளது. இந்த சூழலில், பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றியுள்ளார். இந்த மாற்றம் கட்சியின் நிர்வாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகம் தி.நகர், திலக் நகர் தெருவில் அமைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.  

 நாளை முதல் 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்!

இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாமக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் புதிய முகவரி இடம்பெற்றுள்ளது. முன்பு தேனாம்பேட்டை முகவரி இடம்பெற்றிருந்த படிவத்தில், தற்போது தி.நகர் திலக் நகர் தெருவில்  புதிய முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலக மாற்றம், கட்சியின் செயல்பாடுகளை மேலும் திறம்பட நிர்வகிக்கவும், உறுப்பினர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவும் உதவும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது