அதிரடி மாற்றம்... ரேஷன் கடைகளில் கருவிழிப் பதிவு மூலம் உணவு பொருட்கள் ?!

 
ரேஷன்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள்  மூலமாகவே  வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது. அதில் தற்போது   பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது.  ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும்  முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  

ரேஷன் சர்க்கரை


இந்ந பயோமெட்ரிக்  முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள்  விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் 36000  ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. 

ரேஷன் விரல் பதிவு கைரேகை


இதற்காக ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவங்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அரசு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ‘பாயின்ட் ஆப் சேல்’ (PoS) எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படும் .  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web