வந்தாச்சு ஆப்பு... ஏப்ரல் 1 முதல் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம்!!

 
யுபிஐ


இந்தியாவில்  2016ல் ஏற்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு  ஆன்லைன் பரிவர்த்தனைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்த ஆன்லைன் பரிவர்த்தனையை பொறுத்தவரை இதுவரை நேரடிக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இனி ஏப்ரல் 1 முதல் ரூ.2,000க்கு மேல் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால்  1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கடந்த காலத்தை விட அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யுபிஐ

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளை கொண்ட QR Code அட்டைகளுடன் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டு வருகிறது. இதனை செயல்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி  வியாபாரிகளுக்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என  தேசிய பரிவர்த்தனை கழகம்  தெரிவித்துள்ளது. 

பேடிஎம்


 தேசிய பரிவர்த்தனை கழகத்தின் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதேபோல எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் போன்றவற்றிர்க்கு 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு 1% என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஒரு  தனி நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும்போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டண விதிமுறைகள் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் , பாரத் பே  நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.  அதே நேரத்தில் வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்கள் அல்லது ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர்  இவைகளின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ள் செய்தால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web