சேசிங் வீடியோ... பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடிய கும்பல்... துரத்தும் போலீஸ்!

 
கார் சேசிங் சிசிடிவி

மத்திய பிரதேசம் மாநிலத்தில்  குவாலியரில்  போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் நரேந்திரர். இவர்  ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது 5  பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ10000 பணத்தையும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுவிட்டனர்.  

அதுமட்டுமின்றி குற்றவாளிகள் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மேலும் ரூ20000 எடுத்துள்ளார்கள்.  இதனையடுத்து போலீஸ் கான்ஸடபிள்  அவர்களை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். அவர்கள் காரில் தப்பிக்க முயற்சித்துள்ளனர்.  

க்ரைம்

இதனால் நரேந்திரர் அந்த காரின் முன்பக்க கதவை பிடித்துக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தொங்கிக் கொண்டே சென்றார்.  காரின் வேகத்தை குறைத்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு துரத்தினர். இதனையடுத்து மாநிலம் முழுவதும்  சோதனை சாவடிகளில் 3  பேரை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web