அரசியல் கூட்டங்களுக்கு 'செக்': ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் வெளியீடு ​​​​​​​- முழு விவரம்!

 
 தலைமை செயலகம்

இனி தமிழ்நாட்டில் மாநாடுகள் அல்லது ரோடு ஷோக்கள் நடத்த வேண்டுமானால், வெறும் அனுமதி வாங்குவது மட்டும் போதாது; மக்களின் உயிருக்கு ஏற்பாட்டாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

1. விண்ணப்பிக்கும் கால அவகாசம்:

சாதாரண கூட்டங்கள்: 10 முதல் 21 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பெரிய மாநாடுகள் (50,000 பேருக்கு மேல்): குறைந்தது 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். திடீர் போராட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் 3 நாட்களுக்கு முன் அனுமதி பெறலாம்.

2. ரோடு ஷோ (Road Show) விதிகள்:

ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் முடித்தே ஆக வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட 50% கூடுதல் கூட்டம் வந்தால் அது கடும் விதிமீறலாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தை முறைப்படுத்த 50 நபர்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் தன்னார்வலர்களை (Volunteers) நியமிக்க வேண்டும்.

தவெக விஜய்

3. பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள்:

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அவசர கால சிகிச்சையை உறுதி செய்யவும் பின்வரும் வசதிகள் கட்டாயம்:

குடிநீர்: ஒரு நபருக்கு 4 லிட்டர் என்ற கணக்கில் குடிநீர் வழங்க வேண்டும்.

கழிப்பறை: 500 பேருக்கு ஒரு கழிப்பறை வீதம் அமைக்க வேண்டும்.

மருத்துவக் குழு: ஒவ்வொரு 25,000 பேருக்கும் ஒரு மருத்துவக் குழு (1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள்) இருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ்: 5 லட்சம் பேர் கூடும் இடமாக இருந்தால் 6 அடிப்படை ஆம்புலன்ஸ்கள் மற்றும் 2 உயிர் காக்கும் (ALS) ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

4. கட்டமைப்பு உறுதித்தன்மை:
மேடைகள் மற்றும் தடுப்புகள் (Barricades) பலமாக இருப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் பொறியாளரிடம் சான்றிதழ் பெற வேண்டும். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே இந்தச் சான்றிதழைப் காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சிசிடிவி கண்காணிப்பு: கூட்ட நடைபெறும் முழுப் பகுதியையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். அந்தப் பதிவுகளைக் காவல்துறையிடம் ஒப்படைப்பது கட்டாயம்.

கூட்டத்தில் பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது தனியார் சொத்துக்களுக்கோ சேதம் ஏற்பட்டால், அதற்கு ஏற்பாட்டாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியாக அமரும் வசதி செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காதுகளைத் துளைக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விபத்துகளைத் தவிர்க்கத் தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த விதிகள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள பாதுகாப்பு முறைகளை விடவும் மிகவும் விரிவானதாகக் கருதப்படுகிறது. இனி 'திடீர்' எனப் பெரிய கூட்டங்களைக் கூட்டி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பது அரசியல் கட்சிகளுக்குச் சவாலான காரியமாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!