உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க...சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை!

தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் சீரான மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரம் பகுதியில் சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் மெயின் சாலை. போரூர் பகுதியில் குன்றத்தூர் டெம்பிள் வேவ், குமரன் நகர், பிகேவி மஹா நகர்,ஆர் பி தர்மலிங்கம் நகர்.
பல்லாவரம் பகுதியில் எஸ்பிஐ காலனி, புருசோத்தமன் நகர் பகுதி, கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் சாலை, கமலா தெரு, எம்ஜிஆர் தெரு, பச்சையப்பா நகர், குமரன் குன்றம் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!