செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து புதன்கிழமை காலை முதல் உபரி நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏரிக்குச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.96 அடி என்றும், 3,110 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 6 மணியளவில் வினாடிக்கு 1,380 கன அடி நீர் ஏரிக்குள் வந்துள்ளது. நீர்மட்டம் 22 அடியை நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளின்படி வரும் நீர்வரத்து அளவுக்கு இணையாக உபரி நீர் வெளியேற்றத் தேவையுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்புள்ளதால் உபரி நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் பாயும் வாய்க்கால்கள் வழியாக உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாறு ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
