சென்னை - ஐதராபாத் 2.20 மணி நேரத்தில்.. வருகிறது புல்லட் ரயில் சேவை... இனி பறக்கலாம்!

 
புல்லட்

சென்னை - ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தெற்கு மத்திய ரயில்வே, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அதிவேக ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தற்போது 12 மணி நேரம் ஆகும் பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்களாகக் குறையும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தத் திட்டம் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களுக்குப் புல்லட் ரயில் சேவையை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசின் முனைப்பின் ஒரு பகுதியாகும். தென் மாநிலங்களில் சென்னை - ஐதராபாத் மற்றும் பெங்களூரு - ஐதராபாத் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த ரயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய பயண நேரம் 778 கி.மீ. தூரத்திற்கு சுமார் 12 மணி நேரம். புல்லட் ரயிலில் பயண நேரம் 2 மணி 20 நிமிடங்களாக குறையும். ஆரம்பத்தில் கூடூர் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த இந்த ரயில் பாதை, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று திருப்பதி வழியாகச் செல்லும் வகையில் திட்ட அறிக்கை மாற்றப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தத் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஒரு மாதத்தில் திட்டம் இறுதி செய்யப்படும் என்றார். 

சென்னையில் சென்னை சென்ட்ரல், மீஞ்சூர் (ரிங் ரோடு) என்று இரண்டு இடங்களில் புல்லட் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. ரயில் நிலையங்கள், வணிக வளாகம் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற மேம்பாட்டுப் பணிகளுக்காக, ஒவ்வொரு ரயில் நிலையத்தைச் சுற்றியும் சுமார் 50 ஏக்கர் நிலம் தேவை என்று ரயில்வே தமிழ்நாடு அரசிடம் கோரியுள்ளது. சீரமைப்புப் பணிகள் மற்றும் ரயில் நிலையங்கள் அமையும் இடங்களை விரைவில் இறுதி செய்து, நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை விரைந்து அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டத்திற்குப் பெரும் சவாலாக இருப்பது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானப் பணிகள் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 61 கிமீ தூரத்திற்குக் புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது. இதில், 11.6 கிமீ தூரத்திற்குக் கட்டப்படவுள்ள சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் சவாலானவை. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு விரிவான புவியியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

புல்லட் ரயில்

இந்த வழித்தடம் போண்டவாக்கம், தச்சூர், விச்சூர், மாத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை போன்ற அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது. இங்குள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அருகில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் இடையூறுகள் மற்றும் நெருக்கடிகளைத் திட்டமிடுவதும் செயல்படுத்துவதுமே பெரும் சவாலாக உள்ளது. இந்த ரயில் பாதை 65 தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து செல்லவுள்ளது.

தென் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னைக்கு, இந்த அதிவேகப் புல்லட் ரயில் சேவை கூடுதல் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் என்பது உறுதியாகும். தமிழ்நாடு அரசு முறையான அனுமதிகளை அளித்த பிறகு, அடுத்தக்கட்ட பணிகள் விரைந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!