நாளையும், மறுநாளும் சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து!

 
மின்சார ரயில்


 
சென்னையின் பொதுப்போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்கவை மின்சார ரயில்கள் தான். பள்ளி, கல்லூரி , அலுவலகம் செல்பவர்கள் பெரும்பாலும் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் நாளையும், மறுநாளும் சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில்
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் “  சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 7 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளது.

பறக்கும் ரயில்

நாளை முதல் 2 நாட்கள் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் பிற்பகல் 12.30 மணி- 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்” என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web