சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சி… பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்!

 
புத்தக கண்காட்சி book fair
 

 

சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சி நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

புத்தக கண்காட்சி

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின், ஹார்பர் காலின்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும். தினமும் மாலையில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும். முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா மற்றும் ‘Queer’ பதிப்பகத்துக்கு தனி அரங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவசம்!! ஜனவரி 6 முதல் சென்னையில் புத்தக கண்காட்சி!!

வாசகர்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மைதானம் முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!