சென்னை பிராட்வே பஸ் நிலையம் மூடல்... ஜன.7 முதல் தற்காலிக முனையங்களுக்குப் பேருந்துகள் மாற்றம்!
சென்னை பிராட்வே பஸ் முனையத்தில் மெகா உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
1. ராயபுரம் தற்காலிகப் பேருந்து முனையம்:
அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை) மற்றும் காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இங்கிருந்து செயல்படும். ராயபுரம் நோக்கிச் செல்லும் போது, நார்த் போர்ட் சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும். இங்கிருந்து ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணா சாலை செல்லும் பேருந்துகள், எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள நிறுத்தத்தில் நின்று செல்லும்.
2. தீவுத்திடல் தற்காலிகப் பேருந்து முனையம்:
கடற்கரை சாலை மற்றும் வேப்பேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். தீவுத்திடலில் இருந்து பீச் ஸ்டேஷன் வழியாகச் செல்லும் பேருந்துகள், நார்த் போர்ட் சாலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நின்று செல்லும். ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி செல்லும் பேருந்துகள், ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சாலை நிறுத்தங்களைப் பயன்படுத்தும்.
மண்ணடி வழியாகத் தீவுத்திடல் வரும் பேருந்துகள், முத்துசாமி சாலையில் உள்ள கோட்டை ரயில் நிலையம் (Fort Station) நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடும்.
பேருந்து நிலைய மாற்றத்தால் தொடக்கத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முக்கிய நிறுத்தங்களில் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பாரிமுனைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூடுதல் காவலர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
