சூப்பர்... 27 அடுக்குமாடிகளுடன் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடம்... முதல்வர் அடிக்கல்!

 
செண்ட்ரல்


 
சென்னை சென்ட்ரல் பகுதியில்  சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடம் அமைய உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடம் மொத்தம் 4 அடித்தளங்களில் 8 நிலையில் 586 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1652 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டப்படவுள்ளது. 14,280 சதுர மீட்டர் பரப்பளவில் 546.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

செண்ட்ரல்


சென்ட்ரல் கோபுர கட்டடம் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முதல் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. கட்டட அமைப்பு 4 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடிகளுடன் 120 மீ உயரத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செண்ட்ரல்


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடிக் கட்டடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து   சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், "சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது” என தெரிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?