செம்மரக் கடத்தலில் சென்னை தலைமைக் காவலர்... பரபரக்கும் காவல்துறை!

 
செம்மரம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த தலைமைக்காவலர் சந்திர சேகர். இவருக்கு வயது 45. இவர்   கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.  சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து பின்   குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு ஜீப் ஓட்டுநராக இருந்து வருகிறார். டிசம்பர் 17ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார். இவரை டிசம்பர் 18ம் தேதி  ஆந்திர  சத்தியவேடு பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு இருந்தபோது  கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

செம்மரம்

தலைமைக்காவலருடன் இணைந்து  செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுடன்  3 டன் செம்மரக்கட்டை, ஒரு கார், இருசக்கர வாகனம்  இவைகளை  போலீஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதான தலைமைக் காவலர் சந்திரசேகர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  சென்னை காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.  

செம்மரம்

அதே நேரத்தில் சந்திரசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த விசாரணை முடிவடைந்த  பிறகு  செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் இவருக்குள்ள தொடர்பு குறித்து தெரியவரும் என   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்மரக் கடத்தல் வழக்கில் சென்னை தலைமை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்   பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web