சென்னை–மதுரை விமான சேவை மாற்றம்… மீண்டும் சிறிய விமானங்கள் இயக்கம்!

 
Indigo Flight
 

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் திருச்சி வழித்தடங்களில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இண்டிகோ நிறுவனம் கடந்த 2025 டிசம்பர் 15 வரை சென்னை–மதுரை இடையே தினமும் 8 விமானங்களும், மதுரை–சென்னை இடையே 8 விமானங்களும் என மொத்தம் 16 விமான சேவைகளை இயக்கி வந்தது. இந்த சேவைகள் அனைத்தும் 82 பயணிகள் பயணிக்க கூடிய ஏடிஆர் வகை சிறிய விமானங்களாக இருந்தன.

இண்டிகோ

பின்னர் 2025 டிசம்பர் 16 முதல் இண்டிகோ நிறுவனம் சேவையில் மாற்றம் செய்தது. சிறிய ஏடிஆர் விமானங்களுக்கு பதிலாக 184 பயணிகள் பயணிக்க கூடிய ஏர்பஸ் பெரிய விமானங்கள் இயக்கப்பட தொடங்கின. ஆனால் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தினமும் சென்னை–மதுரை இடையே 3 விமானங்களும், மதுரை–சென்னை இடையே 3 விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டன.

இண்டிகோ

விமான சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஏர்பஸ் பெரிய விமானங்களுக்கு பதிலாக ஏடிஆர் சிறிய விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்க தொடங்கியுள்ளது. இதனால் விமான சேவைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக பயணிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!