வெறிச்சோடிய சென்னை... ஆம்னி பேருந்துகளில் மட்டும் 2.72 லட்சம் பேர் பயணம்!
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையை வாழ்வாதாரமாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி நேற்று காலை முதலே படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் நேற்று மாலை வரையில் ஆம்னி பேருந்துகளின் மூலமாக மட்டுமே 2,72,800 பயணிகள் பயணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காத பலருக்கும் ஆம்னி பேருந்துகளே கைகொடுத்துள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு (KCBT), கிளாம்பாக்கம் (MTC) மற்றும் தாம்பரம் பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி இயக்கப்பட்டுள்ளன.

இது தவிர, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளிலும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
இன்று மாலை நிலவரப்படி, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் எறும்பு ஊர்வது போல நகர்கின்றன. குறிப்பாகப் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
