சென்னை துறைமுக ஊழியர்கள் மே 20-ம் தேதி வேலைநிறுத்தம்!
May 4, 2025, 20:40 IST
துறைமுக ஆணைய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து வரும் மே 20ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளன பொது செயலாளர் நரேந்திர ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துறைமுகங்களின் வளர்ச்சி,பொருளாதார நலன்களை பாதிக்கும் துறைமுக ஆணைய திருத்த மசோதா 2025-ஐ மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 20-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொல்கத்தா, கோவா உள்ளிட்ட 12 துறைமுகங்களில் பணியாற்றும் 20,000 ஊழியர்கள் பங்கேற்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
