விரைவில் ... சென்னை திருப்பதி வந்தே பாரத் ரயில் !!

 
வந்தே பாரத் ரயில்


தமிழகத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து  கோவை,  மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல்   சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஆலோசனை நடைபெற்ற நிலையில் விரைவில்  சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத்

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள்  விடுத்த செய்திக்குறிப்பில் “  வந்தே பாரத்  ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  ஆகஸ்ட்  இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்கப்படும் என  ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர்  ஜூன் 27ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான தேவையும் இருக்கிறது.

வந்தே பாரத்

 இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால்  விரைவில் ஒப்புதல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயார் நிலையில்  உள்ளன. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை - திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம்  விவரங்கள் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய   முதல் வந்தே பாரத் ரயிலை, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web