பயணிகளின் கனிவான பயணத்திற்கு... சென்னை திருவண்ணாமலை ரயில் ரத்து!

சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவண்ணாமலைக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்காக சென்னை திருவண்ணாமலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலைக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் “காட்பாடி பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் உட்பட 6 ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை கடற்கரை திருவண்ணாமலை மாலை 6 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இரவு 9:10 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது . திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7 10 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருவண்ணாமலை - தாம்பரம் அதிகாலை 4.30க்கு செல்லும் ரயில் 19ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
அதே போல் அரக்கோணம் - காட்பாடி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவூர் - காட்பாடி இடையே மட்டும் பகுதியாக இயக்கப்படும். விழுப்புரம் - காட்பாடி இரவு 7 10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், வேலூர் காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. ரயில்கள் ரத்து செய்யப்படுவதை முன்னிட்டு, பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு கொள்ளும்படி சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!