இன்று அதிரபோகிறது சேப்பாக்கம்.. கேப்டன் தோனியின் 200வது போட்டி.. ஜடேஜா சபதம் !!

 
சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி செல்கிறார் கூல் கேப்டன் தோனி. இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16ஆவது ஐபிஎல் சீசனில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விறுவிறுப்பாக தொடங்கி சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது. இது குறித்து ரசிகர்களிடம் கேட்டபோது, டிக்கெட் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தோனியை பார்க்கவே மைதானத்துக்கு செல்வதாக கூறினர். அவர்களுக்கு இன்று டவுள் ட்ரீட் இருக்கு.
இன்று நடைபெறும் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு 200ஆவது போட்டியாகும். தோனி கேப்டனாக களமிறங்கும் இந்தப்போட்டி சென்னையில் நடக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  

இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் க்ரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். எதிரணிக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் தோனியின் மஞ்சள் படையை பார்க்கும்போது. இன்று அதற்கும் மேல் இருக்கும் என்று குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே வீரரான ஜடேஜாவோ நானே பெரிய ‘தல’ ஃபேன் தான் அப்புறம் தான் சென்னை ப்ளேயர் எல்லாம் என பாட்ஷா ஸ்டைலில் கூறியுள்ளார். கேப்டனாக 200 ஆவது போட்டியில் விளையாடும் தோனிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றியை பரிசாக தருவோம், என அதிரடியாக சொல்லியிருக்கார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web