இன்று சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு!

 
justice justice

 

சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவஸ்தவா நேற்று பணிஓய்வு பெற்றார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரையின் பேரில், கேரள உயர் நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றிய சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்றம்

இந்த பரிந்துரையை ஏற்று திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்கிறார். ஆர். என். ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 12.30 மணிக்கு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த அவர் 1966 ஜூலை 8 அன்று பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1992ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, 2016ல் கூடுதல் நீதிபதியாகவும், 2018ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!