நாதஸ்வர உலகத்தில் சோகம்… ராஜண்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா மறைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரான ராஜண்ணா, தமது அண்ணன் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தத்துடன் இணைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனித்த அடையாளம் பதித்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றியவர் ராஜண்ணா. பாரம்பரிய நாதஸ்வர இசைக்கு பெருமை சேர்த்த அவர், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி தமிழ் இசையின் புகழை பரப்பினார்.

கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற ராஜண்ணா, இசைபட வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞர். அவரது மறைவு நாதஸ்வர உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என முதல்வர் தெரிவித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், இசையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துக் கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
