திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் அடிக்கல்!

இன்று திருச்சி, மதுரை மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தமிழக அரசின் டைடல் பாா்க் நிறுவனம் சென்னை தரமணி மற்றும் பட்டாபிராமைத் தொடர்ந்து திருச்சி, கோவை,மதுரையில் டைடல் பூங்காக்களை அமைக்கிறது.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 14.16 ஏக்கா் நிலத்தில் தரைத் தளம், 6 தளங்களுடன் அமையும் இந்த பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு கடந்த மாதம் ஒப்பந்தம் கோரிய நிலையில், அடுத்த 18 மாதங்களுக்குள் இந்த பூங்காப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போன்று மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40,000 சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய இருக்கிறது. சுமார் ரூ.289 கோடி செலவில் தரை மற்றும் 12 தளங்களுடன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னையிலிருந்தபடியே டைடல் பூங்காக்கள் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி காட்சி வழியாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!