இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லை பயணம்... ரூ.62 கோடி மதிப்பிலான பெருநை அருங்காட்சியகம் திறப்பு!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (டிசம்பர் 20, 2025) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் மிக முக்கிய நிகழ்வாக, தமிழர்களின் வீரத்தையும், நாகரிகத்தையும் பறைசாற்றும் வகையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான 'பொருநை அருங்காட்சியகத்தை' அவர் திறந்து வைக்கிறார். சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் (அரசு ஒதுக்கீடு ரூ. 56.36 கோடி மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் உட்பட), 13 ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் மிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய தொல்லியல் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவதே இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் பாண்டிய நாட்டுப் பாரம்பரியக் கட்டடக்கலை முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின்

சங்ககாலப் பாண்டியர்களின் முத்துக்களிக்கும் சிறப்பையும், ரோமாபுரி போன்ற வெளிநாடுகளுடன் அவர்கள் மேற்கொண்ட கடல்வழி வணிகத்தையும் விளக்கும் வகையில் 5D தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்திய தொழில்நுட்பம் மற்றும் அவர்களின் ஈமச்சடங்கு முறைகள் (முதுமக்கள் தாழிகள்) இங்குத் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளன. இங்குச் சுமார் 15 நிமிட ஒளி-ஒலி காட்சி அரங்கம், திறந்தவெளி கலை அரங்கம், கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஸ்டாலின்

45,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சரின் இந்தப் பயணத்தில் இரண்டாம் நாளான நாளை (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை), பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான அரசு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், சுமார் 44,924 பயனாளிகளுக்கு 100.95 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். மேலும், நெல்லை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள 72.10 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன அறுவை சிகிச்சை கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

இன்று மாலை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!