இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி... சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை காமராஜர் சாலையில் பேரணி நடைபெற உள்ள நிலையில் சென்னையில் போக்குவரது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நாளை (10.05.2025) மாலை 17.00 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. இப்பேரணி காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெறுகிறது. இப்பேரணியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் மாலை 16.00 மணி முதல் 18.00 மணி வரை செயல்படுத்தப்படும்.
1. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
2. அண்ணா சிலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு → ஜிபி சாலை→ டவர் கிளாக்ஜிஆர்எச் பாயிண்ட் ராயப்பேட்டை ஹை ரோடு → லாயிட்ஸ் சாலை ஜம்புலிங்கம் தெரு ஆர்.கே.சாலை வி.எம். தெரு, மந்தைவெளி மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷ் சந்திப்பை அடையலாம். 3. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி R.A.புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!