2 ம் கட்ட வாக்குப்பதிவு... முதல்வர் பினராயி விஜயன் வாக்களிப்பு!

 
பினராயி விஜயன்
 

கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில், முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கை பதிவு செய்தார். கண்ணூர் மாவட்டம் பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடிக்கு மனைவி கமலா விஜயனுடன் வந்து வாக்களித்தார். வாக்காளர்களை சந்தித்து பேசவும், சிறார்களுடன் புகைப்படம் எடுக்கவும் நேரம் ஒதுக்கினார்.

இந்த கட்டத்தில் ஏழு மாவட்டங்களில் 6,951 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 21,526 வார்டுகள் உள்ளன. ஜனநாயக விழாவாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்தார். LDF மீண்டும் வெற்றி பெறும் எனும் நம்பிக்கையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். LDF, UDF, NDA ஆகிய முன்னணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது. முடிவுகள் டிசம்பர் 13 அன்று வெளியாக உள்ளன; அதற்கான அரசியல் எதிர்பார்ப்புகள் ஏற்கனவே சூடு பிடித்துள்ளன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!