நாளை தமிழக பட்ஜெட்.... 'எல்லார்க்கும் எல்லாம்’ வீடியோ வெளியிட்ட முதல்வர்!

 
தமிழக பட்ஜெட்

தமிழகத்தில்  2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை  சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.  

தமிழக பட்ஜெட்

இந்நிலையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… அனைத்து மக்களின் வளர்ச்சிக்குமான,  தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26..!  என்ற வீடியோவை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் “எல்லார்க்கும் எல்லாம்” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை கட்டமைப்புகளை கொண்ட, அனைத்து நிலை வளர்ச்சிக்குமான பட்ஜெட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web