கர்நாடகாவில் பரபரப்பு... முதல்வர் சித்தராமையா விசாரணைக்காக நேரில் ஆஜர்!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த புகாரின் பேரில் தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று மனு மீதான தீர்ப்பினை கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியது. சித்தராமையா மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவையும் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டது.
முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சித்தராமையா இன்று மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
