இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
இஸ்ரோ

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து மறைவுக்கு தமிழக முதல்வர்  ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து, திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இஸ்ரோ

இந்நிலையில், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,  "இஸ்ரோ முன்னான் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணிபுரிந்தவர் சு.முத்து, அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.

ஸ்டாலின் தமிழக அரசு


இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது