நீட் தேர்வு ரத்து... அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு!

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் அதில் பேசிய முதல்வர் ” நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது குறித்து ” தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசு மறுத்துவிட்டது.
மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்தாலும், தமிழ்நாடு அரசு தனது சட்டப்போராட்டத்தை தொடரும். நீட் தேர்வால் ஏழை மற்றும் எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகிவிட்டது. இது சமூக நீதிக்கு எதிரானது என்பதால், இதற்கு எதிரான நமது போராட்டம் நிற்காது. நீட் தேர்வுக்கு எதிரான எங்கள் போராட்டம் எந்த வகையிலும் முடிவடையவில்லை தொடர்ந்து கொண்டே தான் இருக்கோம்.
ஏற்கனவே, திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைவரிடமும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன்வடிவை 2வது முறையாக நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
எனவே, நீட் தேர்விற்கு விலக்கு பெறுவது குறித்து ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். சட்ட வல்லுநர்களுடன் இணைந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்தக் கூட்டம் முக்கியமானதாக இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!