மகிழ்ச்சி... ஏ.ஆர்.ரஹ்மானை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில்,” இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் !#ARRahman #TamilNadu #TamilNews #Kollywood #TouringTalkies pic.twitter.com/Z77auwx0QP
— Touring Talkies (@ToouringTalkies) March 16, 2025
ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலில் நெஞ்சு வலி என தகவல் பரவிய நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ரஹ்மானின் மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் இன்ஸ்டாவில், “ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்; நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டால் வழக்கமான பரிசோதனை மேற்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
