முதல்வர் ஸ்டாலின் தான் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்... கமல் புகழாரம்!

 
கமல்


 
தொகுதி மறுசீரமைப்பு குறித்த சர்ச்சை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் “  'முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைகளையும் இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்' எனக்  கூறியுள்ளார்.

கமல்

சென்னை கொளத்தூரில் 'முதல்வரின் கலைக்களம்' எனும் பெயரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில், கலைத் திருவிழா மற்றும் உணவுத் திருவிழாவை  கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கமல்

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன்  தமிழகம் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன்னோடியாக திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பட்டியலிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. போதாக்குறைக்கு விளையாட்டிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்புகளால் தமிழகத்தின் இளைஞர்கள் பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு மட்டுமா நல்லது செய்கிறார்? மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க முயலும்போது, இந்துத்துவ கொள்கைகளையும் இந்தியையும் தேசமெங்கும் திணிக்க முற்படும்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கும்போதும் தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் உறுதியான குரல்களில் ஒன்றாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.' என பேசியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web