இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதை... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்... !

 
ஸ்டாலின்
 


 
திருச்சியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 ஆண்டுகளில், தமிழகத்தில் தி.முக. அரசின் சாதனைகள் பிரமிக்கும் வகையில் உள்ளன. அடுத்த இலக்கை நோக்கி செல்வதால், அனைத்து திட்டங்களையும் விளக்கமுடியவில்லை. திமுக அரசின் வெற்றிப் பயணம் தொடங்கப்பட்டதே திருச்சியில் இருந்துதான். ஏற்கனவே, இங்கு நடந்த கூட்டத்தில் ஏழு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினேன். பெரும்பாலானவற்றை நான்கு ஆண்டுகளில் எட்டிப்பிடித்துள்ளோம்.  

ஸ்டாலின் கடிதம்


பொருளாதாரத்தில் இதுவரை பார்க்காத 9.6 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறோம். எந்த பிரவினரும் விட்டுப் போகாத வகையில் திட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறோம். இதை, கடந்த ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஸ்டாலின்

தமிழக அரசின் வரி விதிப்பு உரிமையை கூட விட்டுக் கொடுத்து விட்டனர். 4 ஆண்டுகளில் விடியல் ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.  முன்னதாக காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web