சுயநலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைத்து விடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

 
ஸ்டாலின்


தமிழகத்தில் நாளை மார்ச் 5 ம் தேதி புதன்கிழமை  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மும்மொழி கொள்கை தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து   மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை (05.02.2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, தமிழக வெற்றி கழகம், மக்கள் நீதி மய்யம் உட்பட   45 கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. 

அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர்  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தயவுசெய்து, அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வையுங்கள். இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை. சுயநலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைத்து விடாதீர்கள். உங்கள் முடிவை மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்யுங்கள்” என  மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web