வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின் !! தொண்டர்கள் உற்சாகம்!!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர்  ஸ்டாலின் தலைமையில்  நேற்று தலைமைச் செயலகத்தில்  சாலை மற்றும் பாலப் பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இருந்த போதே முதல்வருக்கு கடும் உடல் சோர்வு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டம் முடிந்து பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.

ஸ்டாலின்

உடல் சோர்வு மற்றும் மாதாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக  ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில்  மாலையில் அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவமனைக்கு  முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும்  உடன் சென்றார்.

அப்பல்லோ


 இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் முடிந்து நாளை ஜூலை 4ம் தேதி  வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை முடிந்து இன்று காலை வீடு திரும்பியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web