பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மார்ச் 9ல் முதல்வர் அமைச்சரவை கூட்டம்!!

 
முதல்வர் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம்  மார்ச் 9ம் தேதி முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். மேலும்  நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டமாகவும் நடத்தப்படும். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் , தலைமை செயலாளர், துறை சார்ந்த அமைச்சர்கள்,பல்வேறு துறைகளின் செயலர்கள்  கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்டாலின் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்பாக மார்ச் 9ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.   பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூடுவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே வழக்கமாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு விடும்.  அதன் அடிப்படையில் மார்ச் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சட்டசபை ஸ்டாலின் முதல்வர்

இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் பல திட்டங்களுக்கான ஒப்புதல் என அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு  பட்ஜெட்டில்  வெளியாகும் எனப் பேசியிருந்தார். இதனால் இந்த பட்ஜெட் நடுத்தர மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு  பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுவது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web