குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன்... உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அந்த மாநில அரசையும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளது. ஒரு மகனுக்காக ஏங்கிய தம்பதியருக்கு, ரூ.4 லட்சம் கொடுத்து கடத்தப்பட்ட குழந்தையை பெற்றுக்கொடுத்தது. இந்த வழக்கில், குற்றவாளிக்கு முன்ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற நடவடிக்கையை “பொறுப்பற்றது” என உச்சநீதிமன்றம் கண்டித்தது.
“குழந்தை திருடப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். இது சமூகத்திற்கு மிக பெரிய ஆபத்து. இவ்வாறு முன்ஜாமீன் அளிக்கும்போது, ஒவ்வொரு வாரமும் காவல்நிலையத்தில் ஆஜராகும் நிபந்தனை கூட விதிக்கவில்லை” என நீதிபதிகள் சாடினர்.
இந்த வழக்கை தொடர்ந்து, குழந்தை கடத்தலை தடுக்க மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் தங்களின் வரம்பில் உள்ள குழந்தை கடத்தல் வழக்குகளின் நிலையை அறிந்து, அந்த விசாரணைகளை ஆறு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
வழக்குகள் தினசரி விசாரணையாக நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு முதல் 36,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், “மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டால், முதற்கட்டமாக அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும். இது போன்ற சம்பவங்களில் சாலீனம் காட்டப்படுவதாக தெரிய வந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு எனக் கருதப்படும்” எனவும் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குழந்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசுகளும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய கட்டாய நடவடிக்கையாக மாறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!