பெற்றோர்களே உஷார்... 2 வயது குழந்தைக்கு முத்தம் காரணமாக கண் பார்வை இழப்பு !

 
child

 

முத்தத்தின் மூலம் பரவியதாக நம்பப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்கம் காரணமாக 2 வயது ஜுவன் ஒரு கண்ணில் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நமீபியாவைச் சேர்ந்த தாய் மிஷேல் சாய்மான், இந்த சம்பவத்துக்குப் பிறகு பெற்றோருக்கு வேதனையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சாதாரண கண் தொற்று என தொடங்கியது, பின்னர் பெரிய பாதிப்பாக மாறியது.

முதலில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டாலும், குழந்தையின் கண்ணில் கொப்புளம் உருவானது. அதன் விளைவாக கார்னியாவில் 4 மிமீ துளை ஏற்பட்டது. பல வாரங்கள் சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட கண்ணின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை. “என் குழந்தையின் கண்ணில் 4 மிமீ திறந்த காயத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” என்று தாய் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பரிசோதனையில், ஹெர்பெஸ் வைரஸ் தாக்கமே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. பெற்றோருக்கு வைரஸ் இல்லை என்பதால், கொப்புளம் இருந்த ஒருவரால் முத்தம் மூலம் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை முத்தமிடும் பழக்கத்தில் எச்சரிக்கை அவசியம் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!