சிறுவர்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை.. இரு பெண்கள் அதிரடியாக கைது!

 
மஞ்சு - பிரியங்கா

கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் பணியாற்றி வருபவர் பரமேஸ்வரி. இவருக்கு காரமடையை அடுத்த தோலம்பாளையம்புதூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் அந்த வீட்டில் உள்ள சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக ஒருவர் தனது அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி, களப்பணியாளர் ரெபினா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் வெளியே நின்றிருந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் அவர்களது தாய் மஞ்சு மற்றும் அவரது தோழி பிரியங்கா இருப்பதும், இருவரும் அடிக்கடி இரண்டு சிறுவர்களை அடித்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

இளம் நடிகர் கைது

இதையடுத்து, இரு சிறுவர்களையும் மீட்டு, காரமடை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பரமேஸ்வரி புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை தாக்கிய மஞ்சு மற்றும் அவரது தோழி பிரியங்காவை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!