எலி மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம்.. தனியார் நிறுவன ஊழியர்கள் 2பேர் அதிரடியாக கைது!
சென்னை குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரியை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனைவி பவித்ரா (31). கிரிதரன் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவர்களுக்கு வைஷ்ணவி (6), சாய் சுதர்சன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கிரிதரன் வீட்டில் எலிகள் அதிகம் உள்ளதால் எலிகளை ஒழிக்க தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதையடுத்து, டி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகி, அந்த நிறுவன ஊழியர்கள் வீட்டில் எலி மருந்தை வைத்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பவித்ரா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் படுக்கையறைக்கு சென்று ஏசி போட்டு தூங்கினார். ஆனால், நேற்று (நவ.14) காலை வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்று அசௌகரியம் ஏற்பட்டு மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கிரிதரன், பவித்ரா மற்றும் இரண்டு குழந்தைகளை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிதரனும், பவித்ராவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதையடுத்து, குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, வீட்டில் எலி, பூச்சிகள் நடமாட்டம் இருந்ததால், ஆன்லைனில் அழைத்த தி.நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர், வீட்டின் கதவு, ஜன்னலில் பேஸ்ட் போன்ற மருந்தை போட்டுள்ளார். . மேலும், எலிக்கு வீடு முழுவதும் மாத்திரைகளை வைத்ததாக பவித்ரா கூறியதாக கூறப்படுகிறது.மேலும், வீடு முழுவதும் எலி விஷம் பரவியதாகவும், அதை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களிலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எலி மருந்தை வைத்திருந்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர் தாஸ் ஆகிய 2 பேரையும் குன்றத்தூர் போலீஸார் கைது செய்துள்ள நிலையில், உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதேவேளை, வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்தை வைத்தமையே குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணம் எனவும் வீட்டின் உரிமையாளர் கூறியதையடுத்து அந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு குழந்தைகள் இறந்தது குறித்து பெற்றோருக்கு இதுவரை தகவல் தெரிவிக்காததால், இறந்த இரு குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தது. இந்நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கணவன்-மனைவி இருவரும் தற்போது அபாய கட்டத்தைக் கடந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இருவரும் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஐசியுவில் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!