பிரசித்தி பெற்ற கோவிலில் சினிமா பாடலை ரீல்ஸ் பதிவிட்ட சிறுவர்கள்!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழும் நிலையில் இங்கு வைத்து சிறுவர்கள் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோவிலில் ஒரு சிறுமியும் சிறுவனும் சேர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆடிய ஒரு பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுக்க அது இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.
அந்த ரீல்ஸ் வைரலான நிலையில் கோவிலில் வைத்து முகம் சுளிக்கும் வகையில் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அவர்கள் நெல்லை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!