உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்... ஆணுடன் தகராறு... கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்… !

 
கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் ஒரு சிசிடிவி வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இடையே நடக்கும் கடுமையான வாக்குவாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இருவரும் சாலையில் வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அந்த பெண் கடையின் கண்ணாடியை தலையை கொண்டு வேகமாக மோதுகிறார். முதலில் கண்ணாடி உடையவில்லை, ஆனால் 2 வது முறை அதிக ஆவேசத்துடன் மோதியதும், பெண்ணின் தலைநேராக கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்தது.
இச்சம்பவத்தால் கடை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் பறந்துள்ளன. அதிர்ச்சியில் அந்த ஆண் சில விநாடிகளில் அங்கிருந்து தப்பி ஓடினார்.  கடைக்குள் விழுந்த அந்த பெண், அவரே எழுந்து, உடனே உடைந்து போன கதவிலிருந்து வெளியே வந்துள்ளார்.  சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த நெட்டிசன்கள், இது திட்டமிட்டு செய்த செயலா, அல்லது மன உளைச்சலால் நடந்த விபரீதமா என விவாதிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web