உஷார்... தனியாக சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்... தட்டி தூக்கிய பொதுமக்கள்!

கோவை மாவட்டத்தில் 21 வயது மாணவி வீட்டிற்கு அருகே உள்ள அழகுகலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். வழக்கம் போல் இரவு 8 மணிக்கு பயிற்சி முடிந்ததும் தனது வீட்டை நோக்கி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் இளைஞர் பின்தொடர்ந்து வந்து திடீரென்று மாணவியின் மீது மோதுவது போன்று சென்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி, சாலையை விட்டு இறங்கி ஓரமாக நடந்து சென்றார்.
அந்த இளைஞர் மாணவியின் அருகே வந்து பேச முயன்றார். ஆனால் மாணவி பேசவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் மாணவியை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிடத் தொடங்கினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லையில் வசித்து வரும் 32 வயது சரத்குமார் என்பதும், கோவை அருகே பூசாரிபாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. உடனே போலீசார் சரத்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!