ஜப்பான் மீது தாக்குதல் நடத்தப்படும்... ஐநாவுக்கு சீனா பரபரப்பு கடிதம்!
தைவான் விவகாரத்தில் ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி வெளியிட்ட கருத்துகள் “ஆபத்தானவை, தவறானவை” என்று குற்றம் சாட்டி, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.நா. ஆவணமாக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட இக்கடிதத்தில், ஜப்பான் தைவான் பிரச்சினையில் ராணுவ தலையீடு பேசுவது சீனாவின் மைய நலன்களை சவால் செய்வதாகக் குறித்துள்ளது.

ஜப்பான் நாடாளுமன்ற உரையில் தகைச்சி, “சீனா தைவானைத் தாக்கினால் ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்கும்” என பேசியது வரலாற்றில் முதன்முறையாக தைவானை ஜப்பான் பாதுகாப்புடன் இணைத்துப் பேசும் செயலாக சீனா விமர்சித்துள்ளது. இது ராணுவ அச்சுறுத்தலாகவும், “1945 தோல்விக்குப் பிறகு ஜப்பான் எடுக்கும் ஆபத்தான மாற்றம்” என்றும் சீனா சாடியுள்ளது. ஜப்பான், தனது கருத்துகள் தேசிய பாதுகாப்பு கவலைகளைப் பிரதிபலிப்பவை என விளக்கம் அளித்துள்ளது.

இந்தக் கடிதத்தால் சீனா–ஜப்பான் உறவுகளில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன தூதர் ஃபூ கோங், “ஜப்பான் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் தகுதியில்லாதது” என கடுமையாக தாக்கியுள்ளார். தைவான் சீனாவின் பகுதி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சீனா, ஜப்பான் தலையீடு பிராந்திய அமைதிக்கே அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
