குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் சீனா... கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து!
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1980 முதல் 2015 வரை 'ஒரு குழந்தை கொள்கை' இருந்தது. அதன் பிறகு 2015-ல் இரண்டு குழந்தைகளும், 2021-ல் மூன்று குழந்தைகளும் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. சலுகைகளும் உதவிகளும் தரப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனால் சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீன அரசு ஒரு புதிய முடிவை அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) சட்டம் வருகிறது. இதன்படி, கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களுக்கு இனி 13% மதிப்புக் கூட்டப்பட்ட வரி விதிக்கப்படும். இதனால் கருத்தடைச் சாதனங்களின் விலை உயரும். திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்கள் அதிகரிக்க இது வழி வகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் சமூக ஊடகங்களில் இந்த வரி விதிப்பு குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது. 'ஆணுறை விலை உயர்ந்தாலும், அதைவிடக் குழந்தைகளை வளர்க்கும் செலவு பல மடங்கு அதிகம்' எனப் பலரும் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, 2023-ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இப்போது மாறியுள்ளது. சீனா இரண்டாவது இடத்திற்குச் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
