ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது… 1400 லஞ்சம் பெற்ற சீன முன்னாள் நிர்வாகிக்கு மரண தண்டனை!

 
சீனா
 

சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் உயர் நிர்வாகியை, ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா கடும் அணுகுமுறையை தொடர்வதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் பொது மேலாளராக பாய் தியான் ஹுய் பணியாற்றினார். 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்தியதில், சுமார் 15.6 கோடி டாலர் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. விரிவான விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து, நேற்று காலை தியான்ஜின் சிறையில் பய் தியன்ஹுய்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசி ஆசையாக குடும்பத்தினரை அவர் சந்தித்தார். ஏற்கெனவே, இதே நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லை ஷாவ்மினுக்கும் 2,200 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் 2021-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!