கடல் உணவுகள் முதல் சினிமா வரை ஜப்பான் மீது சீனா ‘நிரந்தர தடை’!

 
சீனா ஜப்பான்
 

அண்டை நாடான தைவான் தங்களுடைய ஆட்சிப்பகுதியாகும் என வலியுறுத்தி, போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் இயக்கி சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலாக, தைவானைத் தாக்க நினைத்தாலே தக்க பதிலடி வழங்கப்படும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி எச்சரித்தார். இந்த எச்சரிக்கை சீனாவை எரிச்சலடையச் செய்த நிலையில், ஜப்பானின் செயல்பாடுகள் தலையீடு எனக் குற்றம் சாட்டி சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், ஜப்பான் செல்ல வேண்டாம் என தங்கள் குடிமக்களுக்கே சீனா அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சீனாவின் மிகப்பெரிய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் ஆதாரங்களில் ஜப்பானின் கடல் உணவுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. மீன், இறால், நண்டு, ஸ்குவிட், ஆக்டோபஸ் போன்றவை பெரிய அளவில் ஜப்பானிலிருந்து சீனாவுக்குக் கொண்டுவரப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான கடல் உணவுகள் இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டு வந்த நிலையில் சூழ்நிலை திடீரென மாறியுள்ளது.

ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீன அரசு இப்போது நிரந்தர தடை விதித்துள்ளது. அதுவும் மட்டும் அல்லாமல், ஜப்பானிய திரைப்படங்களுக்கும் தடையை நீட்டித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு புகுஷிமா மின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கடலுக்கு வெளியேற்றப்பட்டதை அடுத்து சீனா கடல் உணவுகளுக்கு கடுமையான கட்டுப்பாட்டு விதித்திருந்தது. அந்த கட்டுப்பாட்டை சில மாதங்களுக்கு முன்பு தளர்த்திய சீனா, தைவானைச் சூழ்ந்த அரசியல் பதற்றம் அதிகரித்ததையடுத்து மீண்டும் முழு தடையைப் புதிதாய் அமல்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!